சினிமா

#Breaking: பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்.. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர் இன்று மரணம்!!

Summary:

பிரபல தமிழ் சினிமா நடிகர் பாண்டு கொரோனா காரணமாக உயிரிழந்தார்.

பிரபல தமிழ் சினிமா நடிகர் பாண்டு கொரோனா காரணமாக உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் பாண்டு. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் இன்றுவரை மிகவும் பிரபலமாக உள்ளவர் பாண்டு. சினிமா மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது 74 வயதாகும் பாண்டு அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் தனியார் மருத்துவமனையில் காலமானார்

நடிகர் பாண்டுவின் மனைவிக்கும் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். நடிகர் பாண்டுவின் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement--!>