அட பிரபல மலையாள நடிகராக இது... உடல் எடை மெலிந்து ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே... கண்கலங்கிய மோகன்லால்...

அட பிரபல மலையாள நடிகராக இது... உடல் எடை மெலிந்து ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே... கண்கலங்கிய மோகன்லால்...


 Famous malaiyala actor srinivasan latest photo viral

மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகர் சீனிவாசன். இவர் ஒரு சிறந்த நடிகராக மட்டுமின்றி சிறந்த கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.

இவரைப்போலவே இவரது இரு மகன்களும் மலையாள திரையுலகில் சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் சீனிவாசன்.

Srinivasan

இந்நிலையில் மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்தார் சீனிவாசன். அப்போது உடல் எடை மிகவும் மெலிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தார். அவரை கண்டதும் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்த அவருக்கு அவருக்கு நெருங்கிய நண்பர்களான மோகன்லால், மம்முட்டி இருவரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக அவரை வரவேற்றனர். 

அவரது மெலிந்த தோற்றத்தை பார்த்து ஒரு நிமிடம் கண் கலங்கிய மோகன்லால் அவரை கட்டியணைதது கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.