உலகம் சினிமா

பட விழாவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம்.! இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற இயக்குனர் கைது.!

Summary:

பட விழாவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம்.! இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற இயக்குனர் கைது.!

கடந்த 2016 ஆம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த பால் ஹக்கீஸ் 'கிராஷ்' படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காகவும், தயாரித்ததற்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். சில தினங்களுக்கு முன்பு இத்தாலியில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்க பால் ஹக்கீஸ் சென்று இருந்தார். இதற்காக அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியபோது ஓட்டல் அறையில் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண்ணை பால் ஹக்கீஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து பால் ஹக்கீஸை மீது வழக்குப் பதிவு செய்த இத்தாலி காவல்துறை அவரை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். இந்த வழக்கு வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. பாலியல் வழக்கில் பால் ஹக்கிஸ் ஏற்கனவே 4 பெண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://cdn.tamilspark.com/media/498284m3-1011_3.jpg

நட்சத்திர ஓட்டலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இதுதொடர்பாக பால் ஹக்கீசிடம்  இத்தாலி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அச்சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement