வறுமையால் கடற்கரையில் கர்ச்சீப் விற்கும் பிரபல நடிகை!
வறுமையால் கடற்கரையில் கர்ச்சீப் விற்கும் பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து நடித்து பிரபலமானவர் நடிகை கே.ஆர். ரங்கம்மாள். இதுவரை சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ரங்கம்மாள். நடிகர் வடிவேலுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாது ஹிந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சென்னை, வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது காமெடி காமெடியில் ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்துள்ள காமெடிகளுக்கு ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவரை ‘சூ பாட்டி’ என்றும் அழைக்கின்றனர்.
தற்போது இவருக்கு 75 வயது ஆகிறது. படங்களில் வாய்ப்பு இல்லாததால் வறுமையில் வாடி வருகிறார். மேலும் ஒன்பது பிள்ளைகள் பெற்றும் யாரும் உதவி செய்யலாததால் கடல் கரையில் கர்ச்சீப் விற்று வருகிறார் நடிகை ரங்கம்மாள். இவரை பார்த்த மக்கள் இவருடன் செல்பி எடுத்து வருகின்றனர்.