சினிமா

நடிகர் விஜய்க்கு புதிய அசத்தலான பட்டத்தை கொடுத்த பிரபல இளம்நடிகை.! என்ன தெரியுமா?

Summary:

famous actress give new surname to vijay

தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கென இந்திய முழுவதும்  ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் விஜய் 63 படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

மேலும் இப்படத்தில் மேயாத மான் பட புகழ் தங்கச்சி இந்துஜாவும் கால்பந்து கோச்சாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்துஜா  மே 1 ல் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் ஸ்டாரை இன்று சந்திக்கிறேன். எப்போதும் உற்சாகமும் அன்பும் நிறைந்தவர். ஊக்குவிக்கும் கிங் தளபதி விஜய் என கூறியுள்ளார். 


Advertisement