சினிமா

ரூம் போட்டு போதை ஏற்றிய பிரபல இளம் நடிகை.! ரூமுக்குள் புகுந்த போலீசார்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக பிரபல தெலுங்கு நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகர், சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதனையடுத்து நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி சக்கரவர்த்தி போதைப்பொருள் தடுப்பு துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வந்தார். இதனையடுத்து சாரா அலிகான், தீபிகா படுகோனே ஆகியொருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்தநிலையில் தெலுங்கு நடிகை சுவேதா குமாரி போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளார். மும்பை போலீசார் நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது அவர் சிக்கியுள்ளார். அங்கு நடந்த சோதனையில், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகை கைதாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement