முதல் முறையாக பேஸ்புக்கில் இணைகிறேன்..! பரபரப்பைக் கிளப்பிய அஜித்தின் அறிக்கை..! விசாரித்ததில் வெளியான பகீர் தகவல்.!

முதல் முறையாக பேஸ்புக்கில் இணைகிறேன்..! பரபரப்பைக் கிளப்பிய அஜித்தின் அறிக்கை..! விசாரித்ததில் வெளியான பகீர் தகவல்.!


Fake statement goes viral about ajith joining in social media

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பொதுவாக சினிமா பிரபலங்கள் என்றாலே சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக இருப்பார்கள்.

ஆனால், அஜித் எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் இல்லை. இந்நிலையில், தான் சமூகவலைத்தளத்தில் இணையப்போவதாக அஜித் வெளியிட்டுள்ள அறிக்கை என போலியான அறிக்கை ஓன்று வெளியாகி வைரலாகியநிலையில், அது போலியான அறிக்கை எனவும், தான் எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் இணையவில்லை எனவும் அஜித் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Ajith

போலியாக வெளியான அந்த அறிக்கையில், என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூகவலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் அஜித்தின் கையெப்பமும் போடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Ajith