அடேங்கப்பா.. வேற லெவல் கூட்டணி! உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் பிரபல நட்சத்திரம்! யார் பார்த்தீர்களா??

அடேங்கப்பா.. வேற லெவல் கூட்டணி! உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் பிரபல நட்சத்திரம்! யார் பார்த்தீர்களா??



Fahat fazil join in udhayanidhi stalin movie

தமிழ் திரையுலகில் முதலில் தயாரிப்பாளராக களமிறங்கி பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். தமிழில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான அவர் அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு என ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது  'ஆர்டிகிள் 15' என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Fahat fazil

மேலும் இதில் வைகைப்புயல் வடிவேலுவும் இணைந்து நடிக்கவுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான புஷ்பா படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.