சினிமா

புகழின் உச்சியில் இருக்கும் நடிகை மீனாவிற்கு இப்படியொரு புதிய பட்டமா? செம உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Summary:

evergreen star title to given for meena

தமிழ் சினிமாவில் பல மாபெரும் பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர்  நடிகை மீனா. நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிப் படங்களில், பல நூறு திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு நைனிகா என்ற அழகிய மகள் உள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.

இந்நிலையில்  திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை மீனா தற்போது ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முக்கியமான துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் நடித்திருந்த கரோலின் காமாட்சி என்ற அந்த தொடரின் போஸ்டரில் மீனாவிற்கு எவர்க்ரீன் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த தொடரின்  இயக்குநர் வெர்னிக் கூறுகையில், அவங்களோட அனுபவத்திற்கு இந்த பட்டம் ரொம்ப சாதாரணம். இந்த பட்டத்துக்கு அவங்களிடம் சம்மதம் வாங்க ரொம்ப கஷ்டமாகி விட்டது. ஆனால்அவர்களை கவுரவப்படுத்தற ஒரு பட்டம் கொடுக்க ஆசைப்பட்டு, பல பட்டங்களை சூட்டிபார்த்து இறுதியில் இந்த எவர்க்ரீன் ஸ்டார் பட்டத்தை கொடுத்தோம் என கூறியுள்ளார்.


Advertisement