சினிமா

ரீமேக்காகும் அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படம்! அட.. ஹீரோவா நடிக்கபோவது யார்னு பாத்தீங்களா! சூப்பர் தகவல்!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்க கூடியவர் தல அஜித்.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்க கூடியவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து செம ஹிட்டான திரைப்படம் என்னை அறிந்தால். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான
இத்திரைப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். மேலும் அவருடன் த்ரிஷா, அனுஷ்கா, விவேக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். அதுமட்டுமின்றி வில்லனாக நடிகர் அருண் விஜய் மிரட்டியிருப்பார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் சூப்பர் ஹிட்டான இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் அதில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதனை சுஜீத் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன் இயக்குனர் சுஜீத் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹோ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement