பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறாரா எதிர்நீச்சல் மாரிமுத்து.. பேட்டியில் உண்மையை கூறிய நடிகர் மாரிமுத்து.?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் மாரிமுத்து. இவர் வெள்ளித்திரையில் உதவி இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராக, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் சிறந்த குணச்சித்திர நடிகராக மாறியிருக்கிறார்.
முன்னதாக இவர் இயக்குனர்களான வசந்த் மற்றும் எஸ் ஜே சூர்யாவுடன் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின்னர் இரண்டு படங்களை இயக்கினார். அப்படங்கள் தோல்வியைத் தழுவியதால், சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அதன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தவர், தற்போது ஜெய்லர் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சின்னத்திரையில் அறிமுகமான இவர், சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரது எதார்த்தமான, எளிமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மாரிமுத்து பேட்டி ஒன்றில், பிக்பாஸ் மிகப்பெரிய பிளாட் பார்ம், பிக்பாஸுக்குப் போனால் உலகப் பிரபலமாகலாம். ஒருவேளை நான் அதில் கலந்து கொண்டால் பிக்பாஸ் வீட்டை இரெண்டாக்காமல் விட மாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.