ரவி தேஜாவின் ஈகிள் படத்திற்கு யுஏ தரச்சான்று வாங்கிய படக்குழு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ரவி தேஜாவின் ஈகிள் படத்திற்கு யுஏ தரச்சான்று வாங்கிய படக்குழு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



Eagle Movie Sensor by UA 

 

நடிகர்கள் ரவி தேஜா, அனுபமா பரமேஸ்வரன், காவ்யா தாபர், நவ்தீப், ஸ்ரீனிவாஸ் அவசராலா, மதுபாலா & அஜய் கோஷ் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஈகிள் (Eagle).

கார்த்திக் கட்டமநேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ஈகிள் திரைப்படம், ஜனவரி 13ம் தேதியன்று உலகளவில் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் வெளியாகிறது. 

மென்டெம் சதீஷ், கோர்லபதி பாபிராஜு, கோர வீரேந்திர பாபு, கவுதம் சிலமகுருதி, ஹர்ஷா ஜம்பாலா, வினய் அனந்து, அபிலாஷ் எம் ஆகியோரின் ஒளிப்பதிவில், தாவ்சந்த் இசையில் படம் உருவாகியுள்ளது. 

சமீபத்தில் படத்தின் டிரைலர், இசை வெளியாகியிருந்த நிலையில், படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழு, யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது.