தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரத்தின் மனைவி மரணம்: திரையுலகினர் அஞ்சலி!.

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரத்தின் மனைவி மரணம்: திரையுலகினர் அஞ்சலி!.


drirector Balachandar wife died today


பிரபல திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் மனைவி ராஜம்(வயது 84). இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவுடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் அதிகாலை 4.30 மணியளவில் அவர் காலமானார். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற்றது. 

இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இயக்குநர் கே. பாலசந்தர் உடல் நல குறைவால் காலமானார்.

இயக்குநர் கே. பாலசந்தரின் மனைவி உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.