சினிமா

கஜா பாதிப்பில் பங்கேற்ற சர்க்கார் திரைப்படம்! வழங்கப்பட நிதி எவ்வளவு தெரியுமா?

Summary:

Donating One day sarkar full collection for kaja cyclone

கஜா புயல் பாதிப்பால் பொலிவிழந்து கிடக்கிறது தென் தமிழகம். வரலாறு காணாத அளவிற்கு வீசிய காற்றால் பல வருடங்களாக வளர்த்த மரங்கள், குடியிருந்த வீடுகள் என அனைதையும் இழந்து தவிக்கின்றனர் மக்கள். கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண நிதிகள் செல்கின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா குடும்பம் ஐம்பது லட்சமும், விஜய் சேதுபதி இருபத்தி ஐந்து லட்சமும் நிதி உதவி செய்துள்ளனர்.

மேலும் நடிகர் விஜய் கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாப்பது லட்சம் நன்கொடை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோடுகிறது சர்க்கார் திரைப்படம். தற்போது கஜாவின் நிதி உதவியில் சர்க்கார் படமும் இணைந்துள்ளது.

சர்கார் படத்தின் அமெரிக்க விநியோகஸ்தர் கஜா புயலுக்கு உதவுவதற்காக சர்கார் படத்தின் ஒரு நாள் வசூல் முழுவதும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். அது குறைந்தது 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 


Advertisement