சினிமா

இந்த தீபாவளிக்கு விஜய் டிவியில் என்ன படம் தெரியுமா?திரைக்கு வந்து சில வாரங்களே ஆன மெகாஹிட் திரைப்படம்!

Summary:

விஜய் டிவி Diwali movie

இந்தியாவில் நம்பர் ஒன் சேனலில் விஜய் டிவியும் ஒன்று. விஜய் டிவியில் எப்போதும் புதுமையான நிகழ்ச்சிகளை மக்களுக்கு வழங்குவதால் அதிகப்படியான ரசிகர்கள் விஜய் டிவிக்கு உள்ளனர். அதன் மூலம் TRB எகிறுகிறது. 

வார இறுதி நாள் என்றால் புது புது கேம் ஷோ, கொண்டாட்டம் என பல புதுமையானவற்றை செய்து வருகின்றனர். விஜய் டிவிக்கு என்று இன்னும் ஒரு பெறுமை இருக்கிறது. அதாவது இதில் வேலை பார்ப்பவர்கள் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி முன்பெல்லாம்  பண்டிகை காலங்களில் புது படங்கள் ஒளிப்பரப்பானால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள். ஆனால் தற்போது இன்டர்நெட், திரையரங்கு என மக்கள் செல்வதால் டிவியில் படம் பார்ப்பது குறைந்து வருகிறது. 

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் திரைக்கு வந்து சில வாரங்களே ஆன புத்தம் புதிய திரைப்படமான கோமாளி திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது.அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயம் ரவி பதிவிட்டுள்ளார்.


Advertisement