சினிமா

நடிகை சாய் பல்லவியுடன் இரண்டாவது திருமணமா!! உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்!!

Summary:

director vijay talk about marriage with saipallavi

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம், தெய்வமகள்,தாண்டவம், தலைவா போன்ற பல வெற்றி படங்களை உருவாக்கியவர் இயக்குனர் விஜய்.

 பல முன்னணி  நடிகர்களையும் வைத்து படங்களை இயக்கிய விஜய் கடந்த 2016  ஆம் ஆண்டு நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டிலேயே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய படம்

 அதை தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கிய விஜய் தற்போது ஜெயலலிதாவின் வரலாற்று கதையைப் படமாக எடுக்க உள்ளார். மேலும் தலைவி என பெயரிடப்பட்ட அப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க வைக்க உள்ளார்.

இவ்வாறு பிஸியாக இருக்கும் இயக்குனர் விஜய், நடிகை சாய் பல்லவியை காதலிப்பதாகவும்,அவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும்செய்திகள் பரவியது.

  director vijay witha saipallavi க்கான பட முடிவு

சாய் பல்லவி விஜய் இயக்கத்தில் தியா, மாரி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் மேலும் தியா படப்பிடிப்பில் இருந்த நிலையில் இவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

 இந்நிலையில் இதற்கு இயக்குனர் விஜய் மறுப்பு தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் கூறுகையில், சாய்பல்லவியையும், என்னையையும் இணைத்து வெளியாகும்  தகவல்கள் முற்றிலும் வதந்தி ஆகும். இதில்  எந்த உண்மையும் கிடையாது. மேலும் நான் திருமணத்தைப்பற்றி இதுவரைக்கும் எதுவும் யோசிக்கவில்லை. பட வேலைகளில் மட்டுமே  தீவிரமாக உள்ளேன் என கூறியுள்ளார். 
 


Advertisement