சினிமா

தனுஷை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கூட்டணியா? அழைப்பிற்காக காத்திருக்கும் பிரபல முன்னணி இயக்குனர்!

Summary:

Director Vetrimaran waiting for vijay calling

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனை தொடர்ந்து அவர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

நடிகர் தனுஷை வைத்து அதிகமான படங்களை இயக்கி வந்த வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் சூரியின் நடிப்பில் ஒரு படத்தையும், சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தையும் இயக்க உள்ளார். அதுமட்டுமின்றி தளபதி விஜய் நடிக்க ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெற்றிமாறன், நடிகர் விஜயுடனான தனது படத்திற்கான கதையை உருவாக்க தொடங்கிவிட்டதாகவும், மேலும் விஜய்யின் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Advertisement