#Breaking: மாயி திரைப்படத்தின் இயக்குனர் சூரிய பிரகாஷ் காலமானார்; சோகத்தில் திரையுலகினர்.!



Director Surya Prakash Passed Away 

 

கடந்த 2000ம் ஆண்டு சூர்ய பிரகாஷ் இயக்கத்தில், நடிகர்கள் சரத்குமார், மீனா, வடிவேலு, விஜயகுமார், சபிதா ஆனந்த், சுவலட்சுமி, ராஜன் பி. தேவ், மற்றும் ஆனந்த் ஆகியோர் நடிக்க வெளியான திரைப்படம் மாயி. இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகும். படத்தில் இடம்பெற்று இருந்த வடிவேலுவின் காமெடி, இன்று வரை ரசிகர்களால் பாராட்டப்பெற்றது. 

96ல் அறிமுகம்: 

இப்படத்தின் இயக்குனர் சூர்ய பிரகாஷ், கடந்த 1996 ல் ராஜ்கிரணின் நடிப்பில் வெளியான மாணிக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி வழங்கினார். அதனைத்தொடர்ந்து 2000 ம் ஆண்டு மாயியை இயக்கினார். 

இதையும் படிங்க: ஹோம்லி லுக்குக்கு பாய்., கவர்ச்சிக்கு ஹாய்.. கடற்கரையில் கவர்ச்சி காட்டும் மடோனா.! அசத்தல் வீடியோ உள்ளே.!!

Maayi movie

சூரிய பிரகாஷ் உயிரிழப்பு

பெண் ஒன்று கண்டேன், திவான், அதிபர், வருஷ நாடு ஆகிய படங்களையும் இவர் இயக்கி வழங்கி இருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் மாயி படத்தின் இயக்குனர் சூரிய பிரகாஷ் உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நடுரோட்டில் மைனா நந்தினியின் கணவருடன் இருவர் கைகலப்பு.. இறுதியில் வெளியான உண்மை.!!