நடுரோட்டில் மைனா நந்தினியின் கணவருடன் இருவர் கைகலப்பு.. இறுதியில் வெளியான உண்மை.!! actress-myna-nandhini-have-problem-on-road-birthday-pra

 

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நந்தினி. இவர் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் மைனா நந்தினி என அழைக்கப்படுகிறார். 

சமீபத்தில் சீரியல்கள், படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என பலவற்றிலும் கலக்கிய மைனா நந்தினி தற்போது யூடியூபில் பெண்களுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மனங்களை கவர்ந்து வருகிறார். 

இதையும் படிங்க: பிரியங்காவுக்கு விரைவில் இரண்டாவது திருமணமா?.. தாயின் ஆசைதான் காரணமாம்.!! கசிந்த தகவல்..!

Actress myna nandhini

யோகேஷுடன் நடுரோட்டில் சண்டை

இந்நிலையில் நடிகை மைனா நந்தினி தனது கணவர் யோகேஷுடன் காரில் சென்ற போது திடீரென பைக்கில் வந்த இருவர் அவரது கணவருடன் நடுரோட்டில் சண்டையிட்டுள்ளனர். மேலும் நந்தினியின் கார் அவர்களது பைக்கை இடிக்க வந்ததாக கூறப்படுகிறது. 

பிறந்த நாளுக்காக பிராங்க்

ஒரு கட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்ட அவர்கள் சமாதானத்திற்கு பிறகு மைனா அருகே வந்து ஹேப்பி பர்த்டே என்ற மலரை கொடுத்துள்ளனர். இது அவரது பிறந்த நாளுக்காக செய்யப்பட்ட பிராங்க் என பின்பு தான் தெரியவந்துள்ளது.

Actress myna nandhini

வைரலான வீடியோ

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகவே பல தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை கூறினாலும், சிலர் பிராங்க் ஒரு அளவுக்கு தான், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியா!! திணறவைக்கும் தர்ஷா குப்தா..