
அஜித் மீது உள்ள தீவிர காதலை நிரூபிக்க இவ்வளவு கோடி செலவா...இது அஜித்துக்கு தெரியுமா
நடிகர் அஜித்தின் மீது உள்ள அளவுகடந்த அன்பால் ,தீவிர பக்தியால் ,பில்லா பாண்டி என்ற படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ்.
இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமானவர் ஆர்கே சுரேஷ். நடிகரும், இயக்குனருமான ஆர்கே சுரேஷ் நடித்து வெளிவர இருக்கும் படம் பில்லா பாண்டி.
இந்த திரைப்படம் சர்க்கார் திரைப்படத்திற்கு போட்டியாக தீபாவளியன்று வெளிவர இருக்கிறது மேலும் இந்த படத்தில் தம்பிராமையா ,இந்துஜா போன்ற முக்கியக் கதாபாத்திரங்களும் நடித்துள்ளனர்.
இதுகுறித்து ஆர்கே சுரேஷ் கூறுகையில் இது முழுவதும் அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் அஜித் சாரை குலதெய்வம் போல் காட்டி இருக்கிறோம். மேலும் நானும் அஜீத்தின் தீவிர ரசிகன் .
பொதுவாகவே அஜீத் தனிமனித வழிபாட்டை விரும்பாதவர். ஆனால் நாங்கள் அவரை கடவுளாக பார்க்கிறோம்.இவ்வாறு அஜித் சார் மீதான காதலை வெளிப்படுத்த 6 கோடி செலவு செய்து இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் அவர் கூறியுள்ளார் .
Advertisement
Advertisement