எங்கள் ஆடு மாடுகளை கவனித்துக்கொள்ள எங்களுக்கு தெரியும்.. பீட்டாவை வெளுத்துவாங்கிய கடைக்குட்டி இயக்குனர்!!

எங்கள் ஆடு மாடுகளை கவனித்துக்கொள்ள எங்களுக்கு தெரியும்.. பீட்டாவை வெளுத்துவாங்கிய கடைக்குட்டி இயக்குனர்!!


director-pandiraj-scolding-peeta-organaization

தமிழ்த் திரைப்பட இயக்குனரான பாண்டியராஜ் சசிகுமாரின் தயாரிப்பில் 2009ல் இயக்கிய பசங்க திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்து 2010ல் அருள்நிதியை கதாநாயகனாக வைத்து வம்சம் திரைப்படமும், சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து மெரினா திரைப்படமும் இயக்கினார். மெரினா திரைப்படத்தில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார்.

PETA

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் இரண்டு வாரங்களையும் தாண்டி, ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இது விவசாயிகள் சம்பந்தப்பட்ட படம் என்பதால், விவாசாயிகள் மத்தியிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

அப்போது பேசிய இயக்குனர் பாண்டியராஜ். "படத்தின் துவக்கத்தில் கார்த்தி சார் என்னுடைய கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பாரா என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. அவருடன் பயணம் செய்ய ஆரம்பித்ததும் எல்லாம் சரியாக இருந்தது. 

PETA

யாரோ நான் நடிகர்களோடு கோபமாக இருப்பேன் என்ற புரளியை கிளப்பியுல்லார்கள். அது சுத்த பொய். படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுகிறார்கள். அதை படத்தில் கொண்டுவர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் என்பது தான் உண்மை. 

பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள். எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன் தான். எங்களை விட சிறப்பாக அவர்களை யாராலும் பார்க்க முடியாது. 

PETA

உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி செல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது? எங்களுக்கு இல்லாத அக்கரை அப்படி என்ன உங்களுக்கு? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எங்கள் ஆடுமாடுகளை. நீங்கள் யாரும் கவலை பட வேண்டாம். ஒரு கல்யாணவீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் மாடு சாப்டாம இருக்குமே , தண்ணி வைக்கனுமே என்று ஓடி வருவோம் அவர்களை கவனிக்க ? மட்டன் , சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு இது எப்படி தெரியும் என்று பீட்டா அமைப்பை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.