என்னவா இருக்கும்..! பீஸ்ட் பட இயக்குனர் வெளியிட்ட ஒத்த வார்த்தை! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஷான் டாம் சாக்கோ, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் இப்படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நாளை' என்று மட்டும் பதிவிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் என்ன அப்டேட் வெளியாக உள்ளதோ? என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் பீஸ்ட் டிரைலரை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.