தமிழகம் சினிமா

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கொரோனாவால் உயிரிழப்பு.! சோகத்தில் சினிமாத்துறை.!

Summary:

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும்

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது. இதற்கிடையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முதல் அலையின் போது பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில், "ரெட்டைச் சுழி", "ஆண் தேவதை" ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் தாமிரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 53 வயதான இயக்குனர் தாமிரா சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement