வாவ்.. ஷார்ட் அண்ட் ஸ்வீட்ட்டாக மகனுக்கு பெயர் வைத்துள்ள இயக்குனர் அட்லீ- பிரியா.! என்ன தெரியுமா??

வாவ்.. ஷார்ட் அண்ட் ஸ்வீட்ட்டாக மகனுக்கு பெயர் வைத்துள்ள இயக்குனர் அட்லீ- பிரியா.! என்ன தெரியுமா??


Director atlee son name is meer

தமிழ் சினிமாவில் ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து மெர்சல், தெறி, பிகில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கான தக்க இடத்தை பிடித்தவர் அட்லீ. அவர் தற்போது ஷாருக்கான் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அட்லீ கடந்த 2014-ஆம் ஆண்டு  நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனை அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தனர்.

atlee

இந்நிலையில், அட்லீ -பிரியா தம்பதியினர் தற்போது தங்களது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து அவனது பெயரை அறிவித்துள்ளனர். அதாவது அவர்கள் குழந்தைக்கு 'மீர்' என பெயர் வைத்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.