சினிமா

கவனமாக இருங்க! ப்ரேமம் பட இயக்குனர் விடுத்த அவசர எச்சரிக்கை! என்ன நடந்துச்சு தெரியுமா?

Summary:

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது பெயரில் போலியான அழைப்புகள் செய்து மோசடி நடப்பதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நேரம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் மலையாளத்தில் உருவாகி பெருமளவில் ஹிட் கொடுத்த பிரேமம் படத்தையும் இயக்கியுள்ளார். இதில் நிவின்பாலி, சாய்பல்லவி, மடோனா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பிரேமம் வெற்றியைத் தொடர்ந்து எந்த பட அறிவிப்பையும் வெளியிடாத அல்போன்ஸ் தற்போது பகத் பாசில் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இசையை குறித்த படம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 9746066514, 9766876651  ஆகிய தொலைபேசி எண்களில் இருந்து எனது பெயரில்  திரையுலகில் உள்ள பல நடிகைகளுக்கும், மற்ற பெண்களுக்கும் போலிஅழைப்புகளை செய்து வாய்ப்பு தருவதாக கூறி மோசடி செய்து வருகின்றனர். நான் அவர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் என்னிடமே அல்போன்ஸ் புத்திரன்  பேசுவதாக நடித்தனர். எனவே அந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அனைவரும் கவனமாக இருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement