அரசியல் சினிமா

போட்டியின்றி தேர்வான இயக்குனர் சங்க தலைவர்! ரசிகர்கள் உற்சாகம்

Summary:

Direct head for bharathiraja

தமிழ் சினிமாவில் இயக்குநர்களுக்காக தமிழ் இயக்குநர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. விக்ரமன் தலைவராகவும், ஆர்கே.செல்வமணி பொதுசெயலாளராகவும் பேரரசு பொருளாளராகவும் இருந்து வந்தனர்.

இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தலைவர் விக்ரமனும் பொதுசெயலாளர் ஆர்கே.செல்வமணியும் ஆண்டறிக்கையை வாசித்து சங்கத்தின் நிர்வாகம் செய்த பணிகளை பட்டியலிட்டனர். பின்னர் பொருளாளர் பேரரசு ஆண்டு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகத்தின் பணிக்காலம் முடிவதால் அடுத்து தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.செல்வமணி, பாக்யராஜ், விக்ரமன், பேரரசு உள்பட ஏராளமான இயக்குநர்கள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தின் முடிவில், புதிய தலைவராக பாரதிராஜாவை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போதைய தலைவரான விக்ரமன் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்துவிட்டதால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். இதன் பின்னர் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, இயக்குநர் சங்கத் தலைவராக தன்னை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.


Advertisement