சினிமா

வடசென்னை 2 உருவாகிறதா? அதிரடியாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்!!

Summary:

dhanush tweet about vadachennai 2

பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களை தொடர்ந்து தமிழில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் மூன்றாவது கூட்டணியில் இணைந்து உருவான திரைப்படம் வடசென்னை. 

இந்த படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

vada chennai க்கான பட முடிவு

 வடசென்னை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஆரம்பத்திலேயே தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் சமீப காலமாக வட சென்னை இரண்டாம் பாகம் கைவிடப்படுவதாக பல செய்திகள் கிளம்பியது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது ரசிகர்களுக்கு இந்த குழப்பம் ஏற்பட என்ன காரணம் என தெரியவில்லை. வடசென்னை இரண்டாம் பாகம் எங்களது கவனத்தில்தான் உள்ளது. என்னுடைய திரைப்படம் குறித்த தகவல் எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளிவரும் வரை எந்த வதந்திகளையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார். 


Advertisement