சினிமா

யாருப்பா அந்த சுருளி.. சும்மா தெறிக்கவிடும் ஜகமே தந்திரம் டீசர்! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது த

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது தமிழ், ஹிந்தி மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் செம பிஸியாக இருந்து வருகிறார். அவரது கைவசம் தற்போது தமிழில் கர்ணன், இயக்குனர் கார்த்திக் நரேனுடன் ஒரு படம், செல்வராகவனுடன் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் ஹாலிவுட்டில் தி கிரே மேன் என பல படங்கள் உள்ளன.

இதற்கிடையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் சூர்யா லட்சுமி, லால் ஜோஸ் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ராசுகுட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மேலும் படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என தனுஷ் மற்றும் அவரது ரசிகர்கள் பெருமளவில் விரும்பினர்.  இந்நிலையில் படத்தின் டீஸர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பிரபலங்கள் பலரும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  மேலும் இந்த டீசரில் படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement