சினிமா

தனுஷின் இரண்டாம் பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. வைரலாகும் புகைப்படம்.!

Summary:

Dhanush in bolliwood movie update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மெகா ஹிட் அடித்ததுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில் தனுஷ் தமிழை தாண்டி பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார். இவர் நடிப்பில் இந்தியில் வெளியான முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தற்போது பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது அப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் நடிக்கும்  அத்ராங்கி ரே திரைப்படத்தில்  அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லாக்டவுன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாதம் நடைப்பெறவுள்ளதாகவும், இப்படத்தின் புதிய லுக் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். தற்போது அப்புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.


Advertisement