இது சுத்தமா சரியல்ல, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.! ஆவேசமான தீபிகா படுகோனே.! எதனால் தெரியுமா?

இது சுத்தமா சரியல்ல, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.! ஆவேசமான தீபிகா படுகோனே.! எதனால் தெரியுமா?


depika-padukone-talk-abot-acting-after-marriage

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் கடந்த ஆண்டு பாலிவுட்நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

சினிமா துறையில் திருமணமான நடிகைகளை ஹீரோயினாக நடிக்க வைப்பதில் இயக்குநர்கள் பெருமளவு தயக்கம் காட்டுகின்றனர். மேலும் அக்கா, அம்மா போன்ற கதா பாத்திரங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கின்றன. இதனால் சில நடிகைகள் தங்களது திருமணத்தை  தள்ளி போட்டு கொண்டு செல்கின்றனர்.

deepika padukone

இந்நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, நடிகை தீபிகா படுகோனே சரியான பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நான் யாரையும் கட்டாயப்படுத்தி சம்பளம் கேட்பது கிடையாது. அது என் தகுதிக்கு கிடைக்கும் சம்பளமே. 

சினிமா துறையில் திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்து விட்டது என்று எண்ணி அவர்களை ஒதுக்குவது முற்றிலும் சரியல்ல. நடிகைகள் நடிகர்கள் என அனைவரும் திருமணம் செய்து தான் ஆக வேண்டும். அவ்வாறு நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் படங்களுக்கு வசூல் குறையும் என பலரும் எண்ணுவதை நான் ஏற்க மாட்டேன். 

deepika padukoneமுன்பெல்லாம் சில நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்தனர். இப்போது அப்படி அல்ல. திருமணத்திற்கு பிறகும் நடிக்கிறார்கள் அவர்களின் படங்கள் நன்கு வெற்றி பெற்று,  வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது என தீபிகா படுகோனே கூறியுள்ளார்.