சினிமா

என்னை பார்த்ததும்.. அஜித் செய்த காரியத்தை போட்டுடைத்த பிரபல நடிகர்! வீடியோ உள்ளே.!

Summary:

delhi ganesh talk about ajith in college function

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இப்படம் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேகே ஆகும்.   இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே அபிராமி வெங்கடாஜலம், டெல்லி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.

nerkonda parvai க்கான பட முடிவு

இந்நிலையில் படப்பிடிப்பில் அஜித் நடந்துகொண்ட விதத்தை குறித்து 
 டெல்லிகணேஷ் சமீபத்தில் கலந்துகொண்ட கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அப்பொழுது அவர், நான் அஜித்துடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்துவிட்டேன்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணைத்துள்ளேன். இந்நிலையில் அவர் முதல் நாள் படப்பிடிப்பில் வழக்கறிஞராக நடிக்கும் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் முன்புபோய் நான் நின்றேன்.என்னைக் கண்டதும் சிரித்துக்கொண்டே என்னை கட்டித் தழுவினார்.

delhi ganesh க்கான பட முடிவு

எவ்வளவு பெரிய நடிகர் அவர் என்னை கட்டி பிடித்ததும் மிகவும் பெருமையாக இருந்தது என மகிழ்ச்சியுடன்  கூறியுள்ளார். டெல்லி கணேஷ் இவ்வாறு பேசும் போது அரங்கமே அதிர்வலையில் அதிர்ந்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement