இரத்த காயங்களுடன் வீட்டில் சடலமாக கிடந்த பிரபல தொகுப்பாளர் தீபக்கின் தந்தை! பரபரப்பு சம்பவம்.

பிரபல டிவி தொகுப்பாளரும், நடிகருமான தீபக்கின் தந்தை அவரது வீட்டில் மர்மனான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தக திமி தா, முன்தினம் பார்த்தேனே, இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார் தீபக்.
அதுமட்டும் இல்லாமல் திருமதி செல்வம், தென்றல் போன்ற டிவி தொடர்களிலும் நடித்துள்ளார் தீபக். சன் டிவி, ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். இந்நிலையில் இவர் அருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
இவரது தாய் மற்றும் தந்தை இருவரும் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்த நிலையில் தீபக்கின் தாயார் கடந்த 26 ஆம் தேதி கும்பகோணத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். இந்நிலையில் தீபக்கின் தந்தை விட்டல் திவாகர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் விட்டலின் மனைவி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கணவர் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.