அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஐயோ.. டிடிக்கு என்னாச்சு? இப்படி போறாங்களே! புகைப்படத்தை கண்டு பதறிய ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. கலகலப்பாக இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் வல்லவர். டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும், ஆடியோ வெளியீட்டு விழா போன்றவைகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதுமட்டுமின்றி டிடி வெள்ளித்திரையில் களமிறங்கி சில திரைப்படங்களிலும் முக்கிய சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கிறார்.

டிடி அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்று ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது அவர் வீல்சேரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் அதில் அவர், நீண்ட தூரம் சென்றால் நடக்க முடிவதில்லை.சில எலும்பு பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.