சினிமா

அக்கானு கூப்பிட்டு, என்ன மாதிரியான கேள்வியை கேக்குறீங்க! தலையில் அடித்துகொண்ட டிடி! வைரலாகும் வீடியோ!

Summary:

DD live chat with fans

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சிற்கும், நடவடிக்கைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. 

மேலும் அவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களையும் சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து டிடி பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் தொகுப்பாளினி டிடி அடிக்கடி தனது ரசிகர்களுடன் லைவ் சாட் செய்வார். இந்நிலையில் அவர் சமீபத்திலும் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்டார். அப்பொழுது ரசிகர்கள் பலரும் மிகவும் வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் பல கேள்விகளை அவர்களிடம்  எழுப்பினர்.

அப்போது ரசிகர் ஒருவர் டிடியிடம்,  அக்கா உங்களை ரொம்ப பிடிக்கும், என்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு தலையில் அடித்துக்கொண்ட டிடி, அக்கானு சொல்லிட்டு எப்படி திருமணம் செஞ்சுக்கிறயான்னு கேக்குறீங்க. எல்லாம் நேரமும் என்னிடம் மட்டும் ஏன் இது மாதிரியான கேள்விகளை கேட்கிறீர்கள் என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

 


Advertisement