சினிமா

செல்லாகுட்டி.. தளபதி விஜய்யாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்! அட.. செம மாஸ் காட்டுறாரே! வீடியோ இதோ!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் விஜய்.&n

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் விஜய்.  இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக இருக்கக் கூடியவர் டேவிட் வார்னர்.
சமூக வலைதளத்தில் செம பிஸியாக இருக்கும் டேவிட் வார்னர் அடிக்கடி வித்தியாசமான  வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இவர் 
இதற்குமுன் தர்பார் படத்தில் வரும் ரஜினி, பாகுபலி பிரபாஸ் போல மாறிய வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது தெறி விஜய்யாக மாறியுள்ளார். அதாவது விஜய் தெறி படத்தில் இடம்பெற்ற செல்லாகுட்டி என்ற பாடலில் உள்ளது போலவே செம ஸ்டைலாக மாறியுள்ளார். அந்த வீடியோவை டேவிட் வார்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது மிகவும் வைரலாகி வருகிறது.


Advertisement