சிவகார்த்தியேகனுடன் போட்டியில் இறங்கும் தனுஷ்; வெல்வது யார்?

சிவகார்த்தியேகனுடன் போட்டியில் இறங்கும் தனுஷ்; வெல்வது யார்?


danush and sivakarthikeyan releasing movie in same month

SK ப்ரொடக்சன் எனும் தயாரிப்பு நிறுவனம் மூலம் "கனா" எனும் படத்தினை முதல் முதலாக தயாரித்தள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தினை  அவரது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். 

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இதனைத்தொடர்ந்து "கனா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார். மேலும் இந்த படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்றும் அறிவித்தள்ளார். 

danush and sivakarthikeyan releasing movie in same

இந்நிலையில் தனது Wunderbar பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் கடந்த 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படத்தின் இரண்டாம் பாகமான  'மாரி-2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் இன்று அவசர அவசரமாக வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

danush and sivakarthikeyan releasing movie in same

எனவே சிவகாத்திகேயனின் "கனா" மற்றும் தனுஷின் "மாரி-2" இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் போட்டியில் களமிறங்குகின்றன என உறுதியாகியுள்ளது. இதில் எந்த படம் வெற்றிபெறும் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்பத்துடன் உள்ளனர்.

தொடக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு பெரும் ஆதரவு கொடுத்து அவரது வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியவர் தனுஷ் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் சில காலங்களாக இருவருக்கும் போட்டிகள் நிலவுவதாக வதந்திகள் பரவின. 

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவித்த அடுத்த நாளே தனுஷும் அவரது படமும் டிசம்பரில் வெளியாகும் என அறிவித்துள்ளதை பார்க்கும் போது இவர்களுக்குள் ஏதோ போட்டி நிலவுவது போல தான் தெரிகிறது.

எது எப்படியோ.. நமக்கு நல்ல படங்கள் வந்தால் சரி.