தந்தையை மிஞ்சும் வரலட்சுமி; கம்பீரமான தோற்றத்தில் 'டேனி' ஃபர்ஸ்ட் லுக்!

தந்தையை மிஞ்சும் வரலட்சுமி; கம்பீரமான தோற்றத்தில் 'டேனி' ஃபர்ஸ்ட் லுக்!


danny-first-look-released

அறிமுக இயக்குநர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி நடித்திருக்கும் `டேனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்து வருகிறார் நடிகை வரலட்சுமி. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

மாரி 2’ படத்துக்கு பிறகு கால்ஷீட் டைரியில் ‘கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு’ என 9 படங்கள் உள்ளது.

varalakshmi

'சர்கார்' படத்தில் இளைய தளபதிக்கு வில்லியாக நடித்து கெத்து காட்டிய வரலட்சுமி தற்பொழுது காவல் துறை உயரதிகாரியாக 'டேனி' படத்தில் நடித்து வருகிறார். 

பிஜி முத்தையா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி 'டேனி' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். 

varalakshmi

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் வரலட்சுமி காக்கி சட்டையில் கம்பீரமான காவல் துறை அதிகாரியாக தோற்றமளிக்கிறார். போலீஸ் வேடத்தில் தந்தை சரத்குமாரையே மிஞ்சிவிடுவாரோ என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் வரலட்சுமி.