சினிமா

ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட்! சும்மா வெறித்தனமாக தெறிக்கவிட்ட தனுஷ்! அட.. என்னனு பார்த்தீங்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஸ்டாராக வலம்  வருபவர் நடிகர் தன

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஸ்டாராக வலம்  வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி ஹாலிவுட், பாலிவுட் என பல படங்களிலும் நடித்து செம மாஸ் காட்டி வருகிறார். இவரது கைவசம் பல முன்னணி இயக்குனர்களின், ஏராளமான திரைப்படங்கள் உள்ளன.

தனுஷ் அடுத்ததாக துருவங்கள் பதினாறு, மாஃபியா  போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு D43 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன்படி தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அதில் தனுஷ் எதிரியை அடித்து துவம்சம் செய்வது போல உள்ளது. மேலும் படத்திற்கு மாறன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 


Advertisement