சினிமா

எல்லாம் விதிப்படிதான் நடக்கும்! அமெரிக்கா செல்வதற்கு முன் உருக்கமாக பேசிய டி. ராஜேந்தர்!!

Summary:

எல்லாம் விதிப்படிதான் நடக்கும்! அமெரிக்கா செல்வதற்கு முன் உருக்கமாக பேசிய டி. ராஜேந்தர்!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகதிறமை கொண்டவர் டி.ராஜேந்தர் இவர் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த மாதம் 19-ம் தேதி 
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது, அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அவர் உடல் நலன் கருதி அமெரிக்காவில் உயர் சிகிச்சை மேற்கொள்ளபட உள்ளது. 

அதற்காக டி. ராஜேந்தர் அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில் அமெரிக்கா செல்வதற்கு முன் அவர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்பொழுது அவர், மருத்துவமனையில் நான் இருந்தபோது சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. தன்னம்பிக்கையை மீறியது எனது கடவுள் நம்பிக்கை. இறைவனை மீறி விதியை மீறி எதுவும் நடக்காது.  நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தது கிடையாது. எனது முகத்தில் தாடி வைத்திருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் எதையும் மூடி வைத்தது கிடையாது. நான் இன்றுதான் அமெரிக்கா செல்கிறேன். ஆனால் அதற்கு முன்பே பல வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

நானே ஒரு நடிகன், இயக்குனர். எனக்கே கதை எழுதுகிறார்கள். நான் இன்று வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கு காரணம் எனது மகன் சிலம்பரசன்தான். அவன் கேட்டுக் கொண்டதால்தான் நான் ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு 12 நாட்களாக என்னுடனே இருந்து கவனித்து கொள்கிறார்.  இப்படியொரு மகனை பெற்றது நாங்கள் செய்த புண்ணியம். சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி என கூறியுள்ளார்.

    


Advertisement