விஜய்க்கு நடிக்க தெரியவில்லையென குவிந்த விமர்சனங்கள்.. கண்ணீரில் தத்தளித்த தந்தை..! வெற்றியின் ரகசியம் இதுதான்.!

விஜய்க்கு நடிக்க தெரியவில்லையென குவிந்த விமர்சனங்கள்.. கண்ணீரில் தத்தளித்த தந்தை..! வெற்றியின் ரகசியம் இதுதான்.!



criticisms-about-vijay-did-not-know-how-to-act

நடிகர் விஜய் திரையில் சாதிக்க, அவர் தனது தொடக்கத்தில் வாங்கிய பல அவமதிப்புகள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாவது உண்டு. அதனைப்போல, தற்போது வெளியான தகவல் பின்வருமாறு., 

விஜய் பள்ளியில் படிக்கும் போதே அவரை படங்களில் நடிக்க வைப்பதில் எஸ்.ஏ.சி ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், விஜய் தனது கல்லூரி படிப்பை முடித்தபிறகு இதனை பற்றி யோசிப்போம் என்று தந்தை கூறியுள்ளார். 

விஜய் கல்லூரியில் படிக்கும் போதே, தன்னை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரிக்குமாறு தந்தை எஸ்.ஏ.சி  விடம் வேண்டுகோள் விடுத்தார். எஸ்.ஏ.சி ஒப்புக்கொண்டு, சொந்த தயாரிப்பில் "நாளைய தீர்ப்பு " என்ற படத்தை இயக்கினார். இருப்பினும், இந்த படம் ஒரு பெரிய தோல்வியடைந்தது. பல கடுமையான விமர்சனங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்தன.

cinema

இதனை தொடர்ந்து விஜய் நடித்த "செந்தூரபாண்டி" படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் விஜய் ஹீரோவாக நடித்தது ரசிகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எஸ்.ஏ.சி., சௌத்ரி அலுவலகம் சென்றபோது, ​​இயக்குனர் விக்ரமன் அங்கே இருந்தார். சௌத்ரி, விக்ரமனை எஸ்.ஏ.சி-க்கு அறிமுகப்படுத்தி, "அவரிடம் நல்ல கதை இருக்கிறது, அந்தக் கதையில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும்" என்றார். 

cinema

பிறகு விக்ரமன் எஸ்.ஏ.சியிடம் கதை சொல்கிறார். இதைத் தொடர்ந்து விஜய் நடித்த படம் தான் "பூவே உனக்காக". இது விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தார் விஜய்.