13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
வாவ்.. இவரா! காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்! யார்னு பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். நானும் ரவுடிதான் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இதில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடிக்கின்றனர்.
இப்படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்புகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்பு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.