உங்களுக்கு மன அழுத்தமா? மறக்காம ரஜினி படத்தை பாருங்க! பிரபல கிரிக்கெட் வீரர் அசத்தல் பதில்!

உங்களுக்கு மன அழுத்தமா? மறக்காம ரஜினி படத்தை பாருங்க! பிரபல கிரிக்கெட் வீரர் அசத்தல் பதில்!


Cricket player srinath talk about rajinikanth

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், சுழற்பந்து வீச்சாளரானருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் அவர் சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். இந்நிலையில் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத்தை  அண்மையில் பேட்டி எடுத்துள்ளார்.

அப்பொழுது அவர் உங்களுக்கு பிடித்த 3 நடிகர்கள் யார் என கேட்டதற்கு ஸ்ரீநாத் அமிதாப்பச்சன், ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் என கூறியுள்ளார். மேலும் ரஜினியை ஏன் பிடிக்கும் என அஸ்வின் கேட்ட நிலையில்,  அதற்கு அவர் ரஜினி உங்கள் வாழ்க்கையில் அற்புதமான எனர்ஜியை கொண்டு வருவார்.நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவரது படங்களை பாருங்கள். திரையில் அவரது நடிப்பு, படத்தில் கொண்டு வரும் விஷயம் ஆகியவை நம்மை பெருமளவில் கவரும். எல்லாருக்கும் ரஜினியை பிடிக்க வைக்கும். 

rajini

ரஜினியை ஒருமுறை ஏர்போர்ட்டில் சந்தித்தபோது, தனது காரில் ஏறும்படியும் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு இறக்கி விடுவதாகவும் கூறினார். அந்த கனிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது. உங்கள் நாள் மோசமாக இருந்தால் முதலில் ரஜினிகாந்தின் திரைப்படங்களை பாருங்கள் என்று அவர் பதிலளித்துள்ளார்.