பிரபல தமிழ் நடிகர் கிரேசி மோகன் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!



crazy-mohan-passes-away


தமிழ் திரையுலகின் மதிப்புமிக்க நடிகராக திகழ்ந்தவர் கிரேசி மோகன். இவர் இன்று மாரடைப்பால் மரணடைந்துள்ளார். கிரேசி மோகன் தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றி வருபவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றுபவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். 

கிரேசி மோகன் ஒரு காமெடி நடிகராக நமக்கு அறிமுகம் ஆனார். ஆனால் இவர் உண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

cracy mohan

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு. அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.