சினிமா

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடீர் திருப்பம்! சிபிஐ வெளியிட்ட அதிரவைக்கும் பின்னணி!

Summary:

CPI report about kaapavanmani dead

தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி, ஜெயம் ரவியின் மழை மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த புதியகீதை உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கலாபவன் மணி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற  பல மொழிகளிலும் எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கலாபவன்மணி நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி அவர் கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்தவாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார்.இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.மேலும் அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்தது. 

உடல் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் எத்தில், மெத்தில் ஆல்கஹால் மற்றும் க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருப்பதாகவும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், அவரது இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னர் இரு வருட விசாரணைக்குப் பிறகு கலாபவன் மணி மரணம் குறித்து அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் கலாபவன் மணி அவர்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுதான் மரணம் அடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் நிறைய பச்சைக் காய்கறிகளை உண்ணும் பழக்கம் கொண்டவர். அதன் மூலம் அவரது உடலில் க்ளோரோபைரபோஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்துள்ளது. மேலும் குடிப்பழக்கம் கொண்டு, கல்லீரல் 

பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் ஆயுர்வேத மருந்துகளை எடுத்து வந்துள்ளார். இவ்வாறு அவரது உணவு மூலமாகவே அவன் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


Advertisement