தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
செயினை அடமானம் வைத்து குதிரையில் வந்த கூல்சுரேஷ்.. பொன்னியின் செல்வன் படத்திற்காக அட்ராஸிட்டி..! இந்த தடவ கிப்ட் தங்க செயின்தான் போல..!!
மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படம் 2 பாகமாக வெளிஇயக்கவுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், பார்த்தீபன், பிரகாஷ் ராஜ், கார்த்திக், ஜெயம்ரவி, நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலரும் நடித்துள்ளனர். படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க சென்ற நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், "நான் எனது செயினை அடமானம் வைத்து, நடிகர் விக்ரம் திரைப்படத்தில் பயணித்த அதே குதிரையை வாடகைக்கு அழைத்து வந்து படம் பார்க்க குதிரையில் வந்துள்ளேன். என்னுடன் 20 பேர் வருகிறார்கள். அவர்களுக்கும் டிக்கெட் எடுத்துள்ளேன்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ரோகினி திரையரங்குக்கு வந்துள்ளேன். இந்த நேரத்தில் லைகா நிறுவனத்திற்கும், திரைப்பட குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வெந்து தணிந்தது காடு., பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தை போடு" என்று தெரிவித்தார்.