சினிமா

என் பரம்பரையிலேயே இதான் பர்ஸ்ட்! செம ஹேப்பியில் குக் வித் கோமாளி புகழ்! என்ன விஷயம் தெரியுமா??

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனில் பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகிலா ஆகியோர் போட்டியாளர்களாக இருக்கும் நிலையில் புகழ்,பாலா, சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி, சரத் ஆகியோர் கோமாளிகளாக ரகளைகள் செய்து வருகின்றனர்.

அதிலும் புகழ் செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல். இவர் கடந்த சீசனில் ரம்யா பாண்டியுடன் செய்த கலாட்டாக்கள் மற்றும் இந்த சீசனில் தர்ஷா, சுனிதா, பவித்ரா என அனைவரிடமும் செய்து அலப்பறைகள் அனைத்தும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் தல அஜித்தின் வலிமை  படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 இந்நிலையில் புகழ் தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர், நான் எத்தனையோ காரை தொடச்சுருக்கேன். வாட்டர் வாஷ் செய்திருக்கிறேன். 10 ,20 ரூபாய் கொடுப்பார்கள். ஆனால் இன்று நான் சொந்தமாக கார் வாங்கியுள்ளேன். என் பரம்பரையிலேயே இதுதான் முதல் கார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார். இந்நிலையில் கார் வாங்கிய புகழ் மற்றும் அருகில் தொகுப்பாளர் மாகாபா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement