சினிமா

அட..தீபா அக்காவா இது! கல்யாணத்தப்போ எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா!! முதன்முதலாக வெளியான புகைப்படம்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து  ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தீபா. இவர் தமிழ் சினிமாவில் வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் என ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் எப்பொழுதும் வெளிப்படையான வெள்ளந்தியான பேச்சாலும், சிரிப்பாலும் தன்னை சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்துக் கொள்ளும் நடிகை தீபா சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது கணவர் சங்கர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். 

 மேலும் தீபா மற்றும் சங்கர் இருவரும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் முதன்முறையாக நடிகை தீபாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அக்கா நீங்க அழகா இருக்கீங்க என கூறிவருகின்றனர்.


Advertisement