
குக் வித் கோமாளி தீபா தனது மகன்களின் குறை குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தீபா. இவர் வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் எப்பொழுதும் சொன்னது வெளிப்படையான வெகுளித்தனமான பேச்சாலும், சிரிப்பாலும் தன்னை சுற்றி இருப்பவர்களை கலகலவென வைத்துக் கொள்ளும் நடிகை தீபா சின்னத்திரை தொடர்களிலும், விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் செய்த ரகளைகள் பெருமளவில் ரசிக்க வைத்தது.
இவ்வாறு அனைவரையும் சிரிக்க வைக்கும் நடிகை தீபாவின் வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களை சந்தித்துள்ளார். நடிகை தீபாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் அவர்களில் ஒருவருக்கு காது கேட்கும் திறன் குறைவாம். அவருக்கு காது கேட்கும் மெஷின் பொருத்தப்பட்டு பயிற்சியளித்து பேச வைத்துள்ளார்களாம். மேலும் அடுத்த பிள்ளைக்கு இதயத்தில் கோளாறு இருந்து இருமுறை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தீபா கூறியுள்ளார்.
Advertisement
Advertisement