கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
பிரபல ஹிட் சீரியலில் களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! யாரெல்லாம் தெரியுமா? செம குஷியான ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர்கள் ஷிவாங்கி மற்றும் பாலா. இவர்கள் இந்நிகழ்ச்சியில் செய்யும் சேட்டைகள், ரகளைகள் வேற லெவல்.
இவர்களுக்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை தொடர்ந்து தற்போது அவர்களுக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது. மேலும் சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்விஜய் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 தொடர்களின் மகாசங்கமம் நடைபெற்று வருகிறது.
இந்த சீரியலில் தற்போது ஏராளமான போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் நடுவர்களாக கடந்த எபிசோடுகளில் பிக்பாஸ் பிரபலங்களான அர்ச்சனா, சோம், ரியோ, அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 குடும்பத்தினருடன் ஷிவாங்கி, பாலா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் ஷிவாங்கி, பாலா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் பாரதிகண்ணம்மா, ராஜா ராணி 2 மகா சங்கமம் படத்தில் கெஸ்ட் ரோலில் வர உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.