பிரபல நடிகை காயங்களுடன் மர்ம மரணம்.. தீவிர விசாரணையில் காவல் துறை.!

வங்கதேசத்தில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹுமைரா ஹிமி என்பவர். தொலைக்காட்சி தொடர்களின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இதன்படி திடீரென்று இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு நண்பர்களால் வங்கதேசத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு ஹுமேராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியிருக்கின்றனர். 37 வயதாகும் ஹுமேராவிற்கு கழுத்தில் காயங்களுடன் உடலில் அடிபட்டிருந்ததால் மருத்துவர்கள் சந்தேகித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த விஷயத்தை அறிந்த இவரது தோழி அங்கிருந்து உடனடியாக கிளம்பி விட்டாராம். இந்த செய்தி அறிந்த காவல்துறையினர் உடனடியாக நடிகையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி குடும்பத்தார் மற்றும் தோழிகளிடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.